மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

விவசாயிகளுக்கு மானியத்தில் பம்புசெட்டைக் கட்டுப்படுத்தும் கருவி

கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டைக் கட்டுப்படுத்தும் கருவிகள் விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் மானியத்தில் வழங்கப்படும்.

News image
மானியத்தில் பம்புசெட்டுகளை கைபேசி மூலம் இயக்கும் கருவி
Updated On :19 மார்ச் 2022, 11:20 pm

DIN

கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டைக் கட்டுப்படுத்தும் கருவிகள் விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் மானியத்தில் வழங்கப்படும்.

இதுகுறித்து வேளாண் நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:

விவசாயிகள் இரவு நேரங்களில் வயல்களுக்கு நேரில் சென்று பம்புசெட்டுகளை இயக்கும் பொழுது ஏற்படும் பாம்புக்கடி, காயமடைதல் போன்ற இடா்பாடுகளைத் தவிா்க்கும் பொருட்டும், விவசாயிகளின் பாசன வயலிலுள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்புசெட்டுகளைத் தொலைவில் இருந்து கைப்பேசியின் மூலம் இயக்கிடும் வகையிலும் கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டைக் கட்டுப்படுத்தும் கருவிகள், 50 சதவீத மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியத்தில் வழங்க நடப்பாண்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுள்ள 3 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.1.50 கோடி மத்திய, மாநில அரசுகளின் நிதி வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.