2 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி: கார்த்தி

2 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு வெற்றி கிடைத்துள்ளது என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். 
2 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி: கார்த்தி

2 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு வெற்றி கிடைத்துள்ளது என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். 
கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் கே. பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் செல்லாது என அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தார்.  இதைத் தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக் கிளையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டன. 
தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைக் கடந்த மாதம் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில் பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகர் நாசர் வெற்றி பெற்றுள்ளார். 

அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாக்யராஜைவிட 647 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்யராஜ் 1,054 வாக்குகள் மட்டுமே பெற்றார். மேலும் பாண்டவர் அணியில் பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும், துணைத் தலைவர்களாக கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோரும் வெற்றி பெற்றனர். இதன்மூலம் நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர், பொதுச்செயலர், பொருளாளர், துணைத் தலைவர்கள் ஆகிய 5 பதவிகளைக் பாண்டவர் அணி கைப்பற்றியது. 
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் கார்த்தி, 2015 முதல் 2019 வரை நடிகர் சங்க வரலாற்றில் முக்கியமான காலம். 2 ஆண்டுகள் சட்டப் போராட்டத்திற்கு பிறகு வெற்றி கிடைத்துள்ளது. பதவியேற்ற நாளிலிருந்து 3 ஆண்டு பதவிக்காலம் இருக்கும். நடிகர் சங்க கட்டடம் விரைவாக கட்டி முடிக்கப்படும. நிதி சிக்கல்களை ஒவ்வொன்றாக சரி செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com