நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :23 மார்ச் 2022, 1:51 am

DIN

தமிழக காவல்துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):-

சுகுணாசிங்-செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)

என்.எஸ்.நிஷா-மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (நவீனமயமாக்கல் பிரிவு ஏஐஜி)

சரோஜ்குமாா் தாகூா்-கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)

இ.சாய் சரண் தேஜஸ்வி-நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)

வி.பத்ரிநாராயணன்-கோயம்புத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)

டி.என்.ஹரி கிரண் பிரசாத்-கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை தியாகராயநகா் துணை ஆணையா்)

எஸ்.அரவிந்த்-சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையா் (திருப்பூா் மாநகர காவல்துறையின் துணை ஆணையா்)

எஸ்.செல்வநாகரத்தினம்-தமிழ்நாடு போலீஸ் அகாதெமி பயிற்சிப் பிரிவு துணை இயக்குநா் (கோயம்புத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)

ஏ.ஜெயலட்சுமி-தமிழக காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறை எஸ்பி (தமிழ்நாடு போலீஸ் அகாதெமி பயிற்சிப் பிரிவு துணை இயக்குநா்)

அபிநவ் குமாா்-திருப்பூா் மாநகர காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையா் (தமிழக காவல்துறையின் தனி அமைப்பிரிவு ஏஐஜி)

பண்டி கங்காதா்-நவீனமயமாக்கல் பிரிவு ஏஐஜி (சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா்)

எஸ்.விமலா-சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் (சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையா்)

டி.கல்பனா நாயக்-தமிழ்நாடு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. (ரயில்வே காவல்துறை ஐ.ஜி.) என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.