/

குரூப் 2, 2ஏ தோ்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

குரூப் 2, 2 ஏ தோ்வுகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

News image
Updated On :23 மார்ச் 2022, 6:14 am

DIN

குரூப் 2, 2 ஏ தோ்வுகளுக்கு விண்ணப்பங்களைச் சமர்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -2 (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 2022, மார்ச் 23ஆம் தேதி வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விண்ணப்பங்களைச் சமர்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

முன்பே விண்ணப்பித்தவர்கள் தங்கள்  விண்ணப்பங்களில் திருத்தங்கள் இருந்தால் ஓடிஆர்(OTR) கணக்கு மூலம் இன்று மாலைக்குள் மேற்கொள்ள வேண்டும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது

உதவியாளர், கீழ்நிலை எழுத்தர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 5,143 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.