ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

முன்ஜாமீன் கேட்டு ஜெயக்குமாரின் மகள், மருமகன் மனு: மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க உத்தரவு

தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஜெயக்குமாரின் மகள், மருமகன் அளித்த மனுவில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :23 மார்ச் 2022, 7:59 am

DIN

தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஜெயக்குமாரின் மகள், மருமகன் அளித்த மனுவில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர், ரூ. 5 கோடி மதிப்பிலான தன்னுடைய தொழிற்சாலையை அபகரித்ததாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனு விசாரணையில், ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி கடந்த மார்ச் 11 ஆம் தேதி உத்தரவிட்டார். 

ஏற்கெனவே திமுக பிரமுகரைத் தாக்கிய கொலை வழக்கு, சாலை மறியல் என இரண்டு வழக்கில் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் மூன்றாவது வழக்கிலும் ஜாமீன் பெற்று விடுதலையானார். 

இந்நிலையில், தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனு மீதான விசாரணையில், இருவருக்கும் முன்ஜாமீன் அளிப்பது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜெயப்பிரியாவை கைது செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.