
கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறையைவிட்டு வெளியே அனுப்பவில்லை என்று தனியார் பள்ளிகள் உறுதியளிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களின் படிப்பும், மனநிலையும் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், கல்விக் கட்டணம் குறித்து தனியார் பள்ளிகள் உறுதி அளித்து சான்று வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
“கல்விக் கட்டணத்தை செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்குள் அனுப்பாமல் வெளியில் அனுப்புவது மற்றும் மாணவர்களின் பெற்றோர் குறித்து தரக்குறைவாக பேசுவது போன்ற நிகழ்வுகள் எதுவும் பள்ளியில் நடக்கவில்லை என சான்றளிக்கப்படுகிறது” என்று உறுதியளித்து பள்ளியில் நிர்வாகிகள் கையெழுத்திட்டு சான்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.