மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி, போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பணிகளும் விரைவாக நடைபெற்றன.

வரும் பருவமழை காலங்களில் மழை வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள சிங்காரச் சென்னை 2.0 திட்டம், உலக வங்கி நிதி மற்றும் கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து திட்டப் பணிகளை உடனடியாக தொடங்க முதல்வர் உத்தரவிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து, புளியந்தோப்பு, மயிலாப்பூர், பெரம்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

இந்நிலையில், மழைநீர் வடிகால் பணி மற்றும் வெள்ள நீர் தடுப்பு பணிகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com