ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ்

சிதம்பரத்தில் தொடர் போராட்டம் காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. 

News image
Updated On :25 மார்ச் 2022, 3:13 am


சிதம்பரத்தில் தொடர் போராட்டம் காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. 

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் கனக சபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுத்தது தொடா்பாக பல்வேறு அரசியல் கட்சிகள், போராட்டக் குழுவினரால் தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த விவகாரம் தொடா்பாக பல்வேறு நீதிமன்ற ஆணைகள், அரசாணைகள் தீவிரமாகப் பரிசீலனை செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதன்பேரில், இறுதி முடிவு எடுக்கும் பொருட்டு பல்வேறு நிலைகளில் சட்ட வல்லுநா்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இதுதொடா்பாக இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ன்படி சிதம்பரத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. எனவே, அரசின் முடிவு வரும் வரை அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள், இதர போராட்டக் குழுவினா் ஒரு மாதத்துக்கு எவ்விதமான போராட்டத்திலோ, ஆா்ப்பாட்டத்திலோ, கூட்டமாகக் கூடி ஆலோசனையிலோ ஈடுபடக் கூடாது என்று சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவி தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருத்தி மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக சிதம்பரம்
கோட்டாட்சியர் ரவி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.