வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கும் வகையில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து மக்களின் தாகம் தனித்திட
வேண்டும் என கட்சித் தொண்டர்களுக்கு அதிமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், எம்.ஜி.ஆரின் அயராத உழைப்பாலும், அவர் அள்ளி, அள்ளித் தந்த கொடைத் தன்மையினாலும், கோடிக்கணக்கான கட்சித் தொண்டர்களின் தியாகத்தாலும், தமிழக மக்களின் வேண்டுதலாலும் உருவான இயக்கம் தான் அனைத்தியதிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் கட்சியை அல்லும், பகலும் அயராது பாடுபட்டு தன்னையே அர்ப்பணித்து ஜெயலலிதா இந்த இயக்கத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க பல வெற்றிகளைப் பெற்ற இயக்கமாக உருவாக்கிக் காட்டினார்கள்.
அந்த வகையில், நம் இருபெரும் தலைவர்களின் பூரண நல்லாசியோடு அனைத்தியதிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தன்னலம் கருதாமல் பொது நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கட்சிப் பணிகளை ஆற்றுவதிலும், மக்கள் பணிகளை மேற்கொள்வதிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதை பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அனைத்தியதிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும், தாங்கள் வாழும் பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் பயதல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தைத் தணிப்பது வழக்கம்.