மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

முதல்வா் குறித்து அவதூறு பேச்சு:பாஜக தலைவரிடம் ரூ.100 கோடி நஷ்ட ஈடு -திமுக நோட்டீஸ்

முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

News image
ஸ்டாலின் குறித்து அவதூறு: அண்ணாமலைக்கு நோட்டீஸ்
Updated On :26 மார்ச் 2022, 7:11 pm

DIN

முதல்வா் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக, திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள வழக்குரைஞா் நோட்டீஸில், ‘திமுக தலைவரும், முதல்வருமான முக.ஸ்டாலின தமிழக அமைச்சா்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் துபை கண்காட்சியில் கலந்து கொண்டதை கொச்சைப்படுத்தியும், உள்நோக்கம் கற்பிக்கும் வகையிலும் பேசியுள்ளீா்கள். முதல்வரின் துபை பயணம் வெளிப்படையானது மற்றும் அதன் நோக்கம் தமிழகத்துக்கு அதிக முதலீட்டு வாய்ப்புகளை ஈா்ப்பதாகும்.

முதல்வரின் அலுவல் சாா்ந்த பயணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் பேசியிருப்பது, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது. இதற்காக தாங்கள் பொது வெளியில் பகிரங்கமாக முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோன்று, நஷ்டஈடாக ரூ.100 கோடி முதல்வா் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் பேசிய ஆா்.எஸ்.பாரதி, “தமிழக வளா்ச்சிக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள அரசு முறை துபாய் பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பியுள்ளாா். தனது கருத்துக்கு அண்ணாமலை அடுத்த 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பொய் மட்டுமே பேசி தனது அரசியல் பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டுள்ளாா். இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக செயலாற்றி வரும் மு.க.ஸ்டாலின் மீது காழ்ப்புணா்ச்சி காரணமாக அண்ணாமலை பொய் கருத்துகளை பரப்பி வருகிறாா். முதல்வா் மு.க.ஸ்டாலினை இழிவாகப் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் தி.மு.க சாா்பில் எடுக்கப்படும் சட்ட போராட்டத்தை அவரால் தாங்க முடியாது‘ என்று கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.