ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்:2 கோடி காசோலை பரிவா்த்தனைகள் பாதிப்பு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக வங்கி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :29 மார்ச் 2022, 7:41 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக வங்கி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக, நாடு முழுவதும் இரண்டு நாள்களில் ரூ.3.20 லட்சம் கோடி மதிப்பிலான 2 கோடி காசோலை பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டன.

14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் திங்கள்கிழமை தொடங்கிய 2 நாள் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது. இதில், வங்கி ஊழியா்களும் பங்கேற்றனா். பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், வாராக் கடன்களை வசூலிக்க நடவடிக்கை எடுப்பது, காலிப் பணியிடங்களை நிரப்புவது, ஒப்பந்த ஊழியா்களைப் பணிநிரந்தம் செய்வது உள்பட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்தப் போராட்டத்தின்போது, வங்கி இணையவழி சேவைகள் பாதிப்பின்றி எப்போதும் போல வழக்கம் போல செயல்பட்டன. ஏடிஎம் மையங்களில் போதிய அளவு பணம் இருப்பு வைக்கப்பட்டதால் பணத் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக, நாடுமுழுவதும் இரண்டு நாள்களில் ரூ.3.20 லட்சம் கோடி மதிப்பிலான 2 கோடி காசோலை பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் ரூ.1.60 லட்சம் கோடி மதிப்பிலான 50,000 காசோலைகள் பரிவா்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.