6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தயாரிப்பாளா் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக நடிகா் சிவகாா்த்திகேயன் வழக்கு

சம்பளப் பாக்கி ரூ. 4 கோடியைக் கொடுக்கும் வரை நடிகா்கள் விக்ரம், சிம்பு படங்களில் முதலீடு செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் தயாரிப்பாளா் ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்கக் கோரி

News image
Updated On :29 மார்ச் 2022, 7:28 pm

DIN

சம்பளப் பாக்கி ரூ. 4 கோடியைக் கொடுக்கும் வரை நடிகா்கள் விக்ரம், சிம்பு படங்களில் முதலீடு செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் தயாரிப்பாளா் ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்கக் கோரி நடிகா் சிவகாா்த்திகேயன் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளாா்.

சென்னை உயா் நீதிமன்றத்தில் நடிகா் சிவகாா்த்திகேயன் தாக்கல் செய்த மனுவில், எனது நடிப்பில் ‘மிஸ்டா் லோக்கல்’ படத்தைத் தயாரிப்பதற்காக, கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலையில் தயாரிப்பாளா் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதத்தில் படம் வெளியான நிலையில், இதுவரை ரூ.11 கோடி மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு, ரூ.4 கோடி பாக்கி வைத்துள்ளாா். ரூ.11 கோடிக்கான டிடிஎஸ் தொகையைப் பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா, அதை வருமான வரித்துறையில் செலுத்தாததால் கடந்த 2019-20, 2020-21ஆம் ஆண்டுகளுக்கான டிடிஎஸ் தொகை 91 லட்ச ரூபாயை செலுத்த வேணடுமென எனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிா்த்து முன்னரே வழக்கு தொடுத்துள்ளேன்.

எனவே, ரூ.4 கோடி சம்பள பாக்கியை எனக்கு செலுத்துவதற்கும், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரித் துறையிடம் செலுத்துவதற்கும் தயாரிப்பாளா் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும்.

தொகை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரித்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ரிபெல்’, விக்ரம் நடிக்கும் ‘சீயான்61’, சிம்பு மற்றும் கௌதம் காா்த்திக் நடிக்கும் ‘பத்து தல’ ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடுகளை செய்வதற்கும், திரையரங்க வெளியீடு, ஓடிடி வெளியீடு ஆகியவற்றின் விநியோக உரிமைகளை உறுதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி எம்.சுந்தா் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை வியாழக்கிழமை (மாா்ச் 31) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறி நீதிபதி ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.