ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

எரிபொருள் விலை உயர்வு: ஏப். 7ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி விருதுநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image
பிரேமலதா விஜயகாந்த்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:50 am

DIN

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி விருதுநகரில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்தும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்தும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி மாலை 4 மணிக்கு விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில்  கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றும் தேமுதிக கேட்டுக்கொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.