சென்னை: சர்வதேச கடல் எல்லைக் கோடு (ஐஎம்பிஎல்) தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததற்காக தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 3 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்களை, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.
ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 102 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்களில் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த டி. விஸ்வலிங்கம் (50), ஆர். சக்திவேல் (38), எஸ். கலைமாறன் (29) ஆகியோர் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 3 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொடரும் இத்தகைய நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதன்கிழமை இரவு 3 மீனவர்களை கைது செய்ததோடு, ஒரு இயந்திர மீன்பிடி படகையும் இலங்கை கடற்படை காவல்துறையினர் பறிமுதல் செய்ததாக தமிழக மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்கு மீனவர் சங்கத்தினர் வேதனையும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினர் இந்த வாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு இந்திய மீனவர்களை கைது செய்ததுடன் அவர்களது படகுகளையும் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 2022 முதல், தமிழகத்தைச் சேர்ந்த 87 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் சுமார் 42 பேர் விடுவிக்கப்பட்டனர். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 45 இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளனர்.
புதன்கிழமை, நாகப்பட்டினத்தில் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர் ஒருவரை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கனடா பிரதமர் இந்தியா வருகை! மும்பையில் உற்சாக வரவேற்பு!

நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்! விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
வெல்லமண்டி என். நடராஜன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்!
இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! என்ன காரணம்?
வீடியோக்கள்
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

