புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: சரிவிலிருந்து மீண்டது மேட்டூர் அணை நீர்மட்டம்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து, நீர்மட்டம் சரிவிலிருந்து மெல்ல மீண்டுள்ளது.

News image
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: சரிவிலிருந்து மீண்டது மேட்டூர் அணை நீர்மட்டம்
Updated On :3 மே 2022, 8:12 am

DIN

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து, நீர்மட்டம் சரிவிலிருந்து மெல்ல மீண்டுள்ளது.

இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1850 கன அடியிலிருந்து 3111 கன அடியாக அதிகரித்து உள்ளது. 

நீர்வரத்து அதிகரித்ததால், இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.50 அடியிலிருந்து 105.58 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 72.26 டிஎம்சியாக  உள்ளது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு  1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 1850 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 3111 கன அடியாக அதிகரித்துள்ளது. 

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத்தொடங்கி உள்ளது. மழையளவு 22.40 மி.மீ ஆக இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.