அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சினிமா பாணியில் கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை: ஒரு டன் குட்கா பறிமுதல்

கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து, அதற்குள் கடத்தி வரப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

News image
சினிமா பாணியில் கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை: ஒரு டன் குட்கா பறிமுதல்
Updated On :3 மே 2022, 8:13 am

DIN


தஞ்சாவூர்: சூர்யா நடித்த சிங்கம் - 3 பட பாணியில் கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து, அதற்குள் கடத்தி வரப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கும்பகோணத்தில் மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்ட கண்டெய்னர் லாரி நேற்று இரவு  பெரியகடைவீதிக்கு வந்துள்ளது. இதில் குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதனை தொடர்ந்து அங்குச் சென்ற தனிப்படை காவல்துறையினர் கண்டெய்னர் லாரியை திறந்து சோதனையிட்டதில் முதலில் ஊதுபத்தி உள்ளிட்ட பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் கன்டெய்னர் லாரி உள்ளே ரகசிய அறை இருப்பது தெரிய வந்தது.  அதனை திறந்து பார்த்ததில், ஒரு டன் எடையிலான குட்கா, பான்பராக் போன்ற தடை செய்யப்பட்ட பொருள்கள் இருந்துள்ளன.  இதனையடுத்து காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த நால்வர் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருவர் என ஆறு நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Story image

குட்காவை கடத்திய கண்டய்னர் லாரி  கிழக்கு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கன்டெய்னர் லாரி பெங்களூரிலிருந்து கும்பகோணத்திற்கு குட்கா பொருள்களை எடுத்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் விசாரணை மேற்கொண்டு ஆறு நபர்களையும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களிடம் காவல்துறையினர் ஒப்படைக்க உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.