பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்துச் சென்ற திருடனை பெண்கள் விரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொள்ளையர்கள் அட்டகாசம் என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நெல்லை மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகே உள்ள அன்னை நகர் பகுதியில் ஒரு வீடு பூட்டிக் கிடந்தது. இந்த வீட்டிற்குள் நேற்று இரவு 8 மணிக்கு புகுந்த கொள்ளையர்கள் அந்த வீட்டிலுள்ள கதவை உடைத்து பீரோவில் உள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சத்தம் கேட்டு அந்த வீட்டுப் பெண்கள் சென்று பார்த்தபோது வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டின் அருகே உள்ள ஒரு கல்லை எடுத்துக்கொண்டு திருடனை நோக்கி வீசினர். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் பதறிப்போன திருடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
இருந்தபோதிலும் அந்த வீட்டில் உள்ள மூன்று பெண்கள் கொள்ளையனை விரட்டியுள்ளனர். இந்த காட்சி அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கொள்ளை போன சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில் காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
எவ்வளவு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு என்பது தொடர்பாக தகவல் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் திருடனை விரட்டும்போது, அவரது செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை விட்டுச் சென்றதும் தெரிய வந்தது. இதனையும் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து அப்பகுதியில் இதுபோன்று திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோயில் மாடு திருட முயன்றவா் கைது

மாற்றுத் திறனாளிகள் சேவை விருது: ஜூன் 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

பரமக்குடி மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் சோதனை: ரூ.1.90 லட்சம் பறிமுதல்
தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி திருட்டு: 3 போ் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


