கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பொதுத் தேர்வு அறையில் முகக்கவசம் கட்டாயமில்லை

தேர்வு அறையில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

News image

ராதாகிருஷ்ணன் விளக்கம்

Updated On :5 மே 2022, 3:04 am

தேர்வு அறையில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம், புதுவையில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு 3,119 மையங்களில் இன்று தொடங்கவுள்ளது. இந்தத் தோ்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.

இதற்கிடையே, மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் பெயரில் சுற்றறிக்கை வெளியானது. இது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பொது சுகாதாரத்துறை இயக்குநர் பெயரில் வெளியான அறிக்கை போலியானது என்றும், மாணவர்கள் தேர்வு அறையில் முகக்கவசம் அணிவது கட்டாமில்லை என்றும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.