துளிபோன்ற ஓராண்டில் கடல்போன்ற சாதனை: முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று இன்று (சனிக்கிழமை) ஓராண்டு நிறைவடைகிறது.


தமிழ்நாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று இன்று (சனிக்கிழமை) ஓராண்டு நிறைவடைகிறது.
இதையொட்டி, சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் ஓராண்டில் திமுக நிறைவேற்றிய திட்டங்கள் மற்றும் சாதனைப் பட்டியலை எடுத்துரைத்தார்.
அவர் பேசியதாவது:
"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையுடன் உழைத்திருக்கிறேன் என்ற மனநிறைவுடன்தான் இந்த மாமன்றத்தில் நின்றிருக்கிறேன்.
இதையும் படிக்க | சென்னை அரசுப் பேருந்தில் பயணித்த மு.க.ஸ்டாலின்!
தனிமனித வாழ்வில் ஓராண்டு என்பது மிக நீண்டதாக இருக்கலாம். ஆனால், ஒரு நாட்டில், மாநிலத்தின் வரலாற்றில் ஓராண்டு என்பது ஒரு துளிதான். துளிபோன்ற இந்த ஓராண்டு காலத்தில் கடல்போன்ற விரிந்த சாதனைகளைச் செய்திருக்கிறோம் என்ற பெருமிதத்தோடு இந்த மாமன்றத்தில் நான் நின்றுகொண்டிருக்கிறேன்.
என்னை இந்த மாமன்றத்தில் நிற்க வைத்த திமுக தீரர்கள் அனைவருக்கும் நன்றி. தோழமைக் கட்சித் தலைவர்களுக்கு நன்றி. இவர்களால்தான் நான் இங்கு தலைநிமிர்ந்து நிற்கிறேன்" என்றார்.
இதைத் தொடர்ந்து, அரசின் ஓராண்டு சாதனைகளைப் பட்டியலிட்டு முதல்வர் உரையாற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...