தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் மேலும் 89 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 89 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 89 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 89 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 34 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 34,54,306-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி புதிதாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. கரோனாவிலிருந்து ஒரேநாளில் மேலும் 64 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதையும் படிக்க- முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் சந்திப்பு
இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,15,782-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 16,298 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி 499 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைக்கு அது 89ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...