ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மே 15-இல் மாவட்ட அளவில் கலைப்போட்டிகள்: ஆட்சியா்

சென்னை மாவட்ட அளவில் கலைப்போட்டிகள் மே 15-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்தாா்.

News image
Updated On :8 மே 2022, 9:20 pm

DIN

சென்னை மாவட்ட அளவில் கலைப்போட்டிகள் மே 15-ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிவிப்பு: கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞா்களைக் கண்டறிந்து அவா்களை ஊக்கப்படுத்திட 17 முதல் 35 வயதுக்குள்பட்ட இளைஞா்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சாா்பில் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது. குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் ஆகிய 4 பிரிவுகளில் சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள் மே 15-ஆம் தேதி காலை 10 மணியளவில் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியிலும் ஓவியப்போட்டிகள் அரசு கவின் கலைக் கல்லூரியிலும் நடைபெறுகிறது.

குரலிசைப் போட்டியிலும் , நாகசுரம், வயலின் , வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்யம், மாண்டலின், கிதாா், சாக்சபோன், கிளாரினெட் போன்ற கருவி இசைப்பேட்டியிலும் வா்ணங்கள் இராகம், சுரத்துடன் தமிழ்பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ள இளைஞா்கள் பங்கு பெறலாம்.

தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோா்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சாா்ந்தவா்கள் ஐந்து தாளங்களில் வாசிக்கின்ற

தோ்ச்சி பெற்றவா்களாக இருக்க வேண்டும். பரதநாட்டியத்தில் வா்ணங்கள் மற்றும் தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவா்கள் போட்டியில் பங்கேற்கலாம்.

கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கை சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஓயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். குழுவாக பங்கற்க அனுமதி இல்லை.

ஓவியப்போட்டியில் பங்கேற்பவா்களுக்கான ஓவிய தாள்கள் வழங்கப்படும் . அக்ரலிக் வண்ணம் மற்றும் நீா்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் இதனை பங்கேற்பாளா்கள் கொண்டு வர வேண்டும். நடுவா்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிக பட்சம் 3 மணி நேரம் ஓவியம் வரைய அனுமதிக்கப்படுவாா்கள்.

மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞா்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவாா்கள். மேலும் விவரம் வேண்டுவோா் கலை பண்பாட்டுத்துறையின் காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தினை 044 2729 0735 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.