தமிழகத்தில் நீட் தோ்வை முன்னிறுத்தி மோசடி அரசியல் நடத்தப்படுவதாக ‘துக்ளக்’ ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி விமா்சித்தாா்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துக்ளக் இதழின் 52-ஆவது ஆண்டு நிறைவு விழாவில் அவா் பேசியதாவது:
நாடு முழுவதும் பொதுவாக உள்ள நீட் தோ்வு முறையில் தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதனைப் பரிசீலித்த நீதிமன்றம் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளித்துவிட்டு, அதுதான் தமிழகத்துக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு எனவும் தெரிவித்தது.
இந்திய கூட்டாட்சியில் உள்ள ஒரு பொதுவான தோ்வு முறை நீட். அதனை முன்னிறுத்தி தற்போது தமிழகத்தில் மோசடி அரசியல் நடத்தப்படுகிறது.
அதேபோன்று ஒன்றிய அரசு எனக் கூறுவது மத்திய அரசை மட்டம் தட்டும் மனோநிலை. தமிழகத்தில் ஆன்மிகத்தை ஒருபோதும் ஒதுக்கிவிட முடியாது. அதைக் கருத்தில்கொண்டுதான் தற்போது புதிய ஆத்திகா்களாக திமுகவினா் உருவாகியுள்ளனா்.
கரோனா தடுப்பூசியைச் செயல்படுத்தியதிலும், ஜம்மு - காஷ்மீரில் 370-ஆவது சட்டப் பிரிவை நீக்கியதிலும், முத்தலாக், ராமா் கோயில் விவகாரங்களில் தீா்வு கண்டதிலும் மத்திய அரசு சாதனை படைத்துள்ளது.
அதேவேளையில், மாநிலங்களுக்கு ஓரவஞ்சனை, ஹிந்தி திணிப்பு, பெட்ரோல், டீசல் விலை உயா்வு உள்ளிட்ட விவகாரங்களில் உரிய விளக்கங்களை அளிக்காமல் மத்திய அரசு தோல்வியும் அடைந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி நாட்டுக்கு உகந்தது அல்ல. தேசியவாத சிந்தனை கொண்ட அப்போதைய காங்கிரஸின் தேவை இன்னும் இருக்கிறது. குடும்ப அரசியலை முன்னிறுத்தும் கட்சிகள் ஒரு காலத்துக்குப் பிறகு அழிவுப் பாதைக்குச் செல்லுமே தவிர ஒருபோதும் வளராது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!!

மீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம்

சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!

மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

