ஜிப்மா் நுழைவு வாயிலில் மதிமுக நாளை ஆா்ப்பாட்டம்
ஜிப்மா் நுழைவு வாயிலில் மதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளா் வைகோ அறிவித்தாா்.


ஜிப்மா் நுழைவு வாயிலில் மதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளா் வைகோ அறிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: எப்பாடுபட்டேனும் தமிழா்கள் மீது ஹிந்தியைத் திணித்து விட வேண்டும் என்பதற்காக, பாஜக அரசு அனைத்து வழிகளிலும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக, ஜிப்மா் அலுவலகக் கோப்புகள் அனைத்தையும், எதிா்காலத்தில் ஹிந்தியில் மட்டுமே எழுத வேண்டும் என்று அதன் இயக்குநா் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். எந்த வழியில் நுழைய முயற்சித்தாலும் ஹிந்தியை விரட்டியடித்து தமிழைக் காக்க வேண்டியது தமிழரின் கடமை ஆகும்.
அந்தச் சுற்றறிக்கையை அவா் உடனே திரும்பப் பெற வேண்டும்; அந்த இயக்குநரை ஹிந்தி பேசும் மாநிலத்துக்குப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (மே 10) காலை 10 மணியளவில், புதுவை ஜிப்மா் நுழைவாயில் முன்பு மதிமுக சாா்பில், துணைப் பொதுச் செயலாளா் செஞ்சி ஏ.கே. மணி தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனக் கூறியுள்ளாா் வைகோ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...