ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சென்னை விமான நிலையத்தில் ரூ.31.99 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.31.99 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :9 மே 2022, 2:07 pm

DIN

சென்னை விமான நிலையத்தில் ரூ.31.99 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபையிலிருந்து, துபை ஏர்லைன்ஸ் விமானம் மூலம், நேற்று சென்னை வந்த பயணி ஒருவரை விமான நிலைய சுங்கத்துறையினர், அண்ணா சர்வதேச விமான நிலைய சர்வதேச முனையத்தின் வெளியேறும் பகுதியில் வழிமறித்து சோதனையிட்டனர்.

இந்த சோதனையின் போது, அந்த பயணி அவரது மலக்குடலில் மறைத்து கடத்தி வந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 24 காரட் தூய்மையான இந்த 686 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ. 31.99 லட்சமாகும். இதையடுத்து அந்த பயணி கைது செய்யப்பட்டார். 

மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.