மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

"இந்தி மட்டும்" என்ற உறுதி மொழி தருகிற அதிகாரம் ஜிப்மருக்கு யார் தந்தது? - வெங்கடேசன் எம்.பி கேள்வி

சட்டம் இரு மொழி பயன்பாடு பற்றி பேசும்போது நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவிற்கு "இந்தி மட்டும்" என்ற உறுதி மொழி தருகிற அதிகாரம் ஜிப்மருக்கு யார் தந்தது?

News image
Updated On :9 மே 2022, 6:00 am

DIN

சட்டம் இரு மொழி பயன்பாடு பற்றி பேசும்போது நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவிற்கு "இந்தி மட்டும்" என்ற உறுதி மொழி தருகிற அதிகாரம் ஜிப்மருக்கு யார் தந்தது? என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி ஜிப்மர் "அலுவல் மொழி அமலாக்கம்" பற்றிய சுற்றறிக்கை அப்பட்டமான சட்ட மீறல் ஆக அமைந்திருக்கிறது. 

ஏப்ரல் 28 ஆம் தேதி ஜவர்கலால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (ஜிப்மர்) இரண்டு சுற்றிக்கைகளை ஒரே நாளில் வெளியிட்டுள்ளது. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுவதோடு அதில் ஒரு சுற்றறிக்கை அலுவல் மொழிச் சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது. 

ஒரு சுற்றறிக்கை No/HC/OLI/2022 அலுவல் மொழிச் சட்டம் 1963 பிரிவு3(3) ஐ குறிப்பிட்டு அதன்படி பொது ஆணைகள், அறிக்கைகள், தீர்மானங்கள், விதிகள், நிர்வாகம் தொடர்பான மற்றும் பிற அறிக்கைகள், ஊடக செய்திகள், ஒப்பந்தங்கள், உடன்பாடுகள், உரிமங்கள், அனுமதிகள், விலை கோரல் (டெண்டர்) மற்றும் அதற்கான படிவங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் எல்லாம் இரு மொழிகளில் அதாவது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. 

இரண்டாவது சுற்றறிக்கை No/OL imple/2022 அதே தேதியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் உள்ளடக்கம் அதிர்ச்சியை தருகிறது. அது சொல்வது என்ன?

அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் எல்லா பதிவேடுகள், பணி ஏடுகள், பண்க் கணக்குகள் ஆகியவற்றின் பொருள், விவரங்களின் தலைப்புகள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்படும். எல்லா பதிவேடுகள், பணி ஏடுகள், பணிக் கணக்குகள் ஆகியவற்றில் எதிர்கால பதிவுகள் இனி முடிந்த அளவிற்கு இந்தியில் மட்டுமே செய்யப்படும்"

இந்த உறுதிமொழி ஜிப்மர் இந்தி பிரிவால், நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவிற்கு தரப்பட்டுள்ளதாம். 

இது சட்ட மீறல் மட்டுமின்றி இந்தியைத் திணிக்கிற அப்பட்டமான நடவடிக்கை ஆகும். சட்டம் இரு மொழி பயன்பாடு பற்றி பேசும்போது "இந்தி மட்டும்" என்ற உறுதி மொழியை தரும் அதிகாரம் ஜிப்மருக்கு எங்கே இருந்து வருகிறது?

என்னப் பொறுத்த வரையில் ஜிப்மர் போன்ற நிறுவனங்களில் உள்ள இந்த பிரிவுகளுக்கு "இந்தி செல்" என்ற பெயரே சரியில்லை. அலுவல் மொழி அமலாக்க குழு என்ற வகையில் "OLI Cell"என்றுதான் இருந்திருக்க வேண்டும். அக் குழுவின் நோக்கமே தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்று கருதுகிறேன். அந்த "செல்" சட்டத்தின் படியே செயல்பட வேண்டடும். "இந்தி மட்டுமே" என்ற உறுதி மொழி சட்ட நியதிகளை கடந்தது ஆகும்.  

உண்மையில், மத்திய அரசின் துறை, நிறுவனங்கள் எல்லாம் பொது மக்களுக்கான தகவல் தொடர்புகளை தமிழ்தான் செய்வதை ஊக்குவிக்க வேண்டும். 

அகவே இந்த சட்ட மீறல் சுற்றறிக்கை எண் No/OL imple/2022 திரும்பப் பெற வேண்டும். 

உடனடியாக இத்தகைய நடவடிக்கையை ஜிப்மர் எடுக்க வேண்டும் என்று அதன் இயக்குநர் மரு.ராகேஷ் அகர்வாலுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.