முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை 5 பேர் கொண்ட மத்திய கண்காணிப்புக்குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது.
முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை

முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை 5 பேர் கொண்ட மத்திய கண்காணிப்புக்குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது. 

முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக உச்ச நீதிமன்றம் பரிந்துரையின்படி மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்ஷன்ராஜ் தலைமையிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த குழு இன்று திங்கள்கிழமை முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை, பேபி அணை, ஷட்டர் பகுதிகள், நீர்க்கசிவு காலரி ஆகியவற்றை ஆய்வு செய்கிறது. 

அணையில் கோடை காலத்தில் செய்யப்பட்ட வேண்டிய  பராமரிப்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. 
 
இன்று மாலை குமுளியில் உள்ள கண்காணிப்பு அலுவலகத்தில் இரு மாநில அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com