ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

News image
பேரவைத் தலைவர் அப்பாவு
Updated On :10 மே 2022, 9:14 am

DIN

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 22 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், துறை சார்ந்த அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டனர்.

கூட்டம் நடைபெற்ற 22 நாள்களில் அம்பேத்கர், மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா உள்பட 22 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

மேலும், சட்டப்பேரவையில் நூற்றாண்டு மலரை பேரவைத் தலைவர் அப்பாவு இன்று காலை வெளியிட்டார்.

இறுதி நாளான இன்று காவல்துறை மானியக் கோரிக்கையின் கீழ் புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அப்பாவு அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.