விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.70 கோடி தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.70 கோடி மதிப்பிலான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :13 மே 2022, 4:31 pm

DIN

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.70 கோடி மதிப்பிலான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தை சுங்கத்துறையினர் சோதனை செய்தபோது, இரண்டு பேரின் பைகளில் ரப்பர் போன்ற பசைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

சென்னை மண்ணடியைச் சேர்ந்த தமீம் அன்சாரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த சஜிதா யாஸ்மின் ஆகியோரிடமிருந்து ரூ.72.63 லட்சம் மதிப்பிலான 1.596 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.   

மற்றொரு சம்பவத்தில் சென்னை சர்வதேச விமான நிலைய பயணிகள் அறையின் கழிப்பறையில் பாலீத்தின் பையிலிருந்து ரூ.97.57 லட்சம் மதிப்பிலான 2.12 கிலோ கிராம் எடைகொண்ட தங்கம் கண்டெடுக்கப்பட்டது.

இத்துடன் மொத்தம் 3.716 கிலோ கிராம் தங்கம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1.70 கோடி ஆகும். இதுதொடர்பாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.