நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேரறிவாளன் வழக்கில் நாளை (மே 18) தீர்ப்பு

பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை (மே 18) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. 

News image
Updated On :17 மே 2022, 4:28 pm

DIN

பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை (மே 18) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது. 

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ள பேரறிவாளன் தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆா். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கடந்த 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ராகேஷ் திவிவேதி, பேரறிவாளன் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் ஆகியோா் வாதிட்டனா். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நட்ராஜ் வாதிட்டார்.

அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நாளை (மே 18) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு  நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளிக்கவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.