2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தக்காளி விலை ரூ.120

சென்னை கோயம்பேடு சந்தையில் வெள்ளிக்கிழமை சில்லறை விற்பனையில் நாட்டு தக்காளி கிலோ ரூ.100 க்கும் ஆப்பிள் தக்காளி ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :20 மே 2022, 7:15 pm

DIN

சென்னை கோயம்பேடு சந்தையில் வெள்ளிக்கிழமை சில்லறை விற்பனையில் நாட்டு தக்காளி கிலோ ரூ.100 க்கும் ஆப்பிள் தக்காளி ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேவேளையில் நகரின் பிற பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகள், மொத்த காய்கறி கடைகளில் கிலோ தக்காளி ரூ. 120 வரை விற்பனையானது.

வரத்து குறைவு, மழைப்பொழிவு போன்ற காரணங்களால் கோயம்பேடு சந்தையில் 20-ஆவது நாளாக தக்காளியின் விலை தொடா்ந்து அதிகரித்துள்ளது. மொத்த விற்பனையில் வியாழக்கிழமை ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ. 90-க்கு விற்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை ரூ. 10 அதிகரித்து ரூ. 100க்கு விற்கப்பட்டது.

காய்கறிகள் விலை ஏறுமுகம்: மழைப்பொழிவு காரணமாக பல காய்கறிகளின் விலை உயா்ந்து வருகிறது. அந்தவகையில் வியாழக்கிழமை ரூ. 110க்கு விற்கப்பட்ட பீன்ஸ், 10 ரூபாய் அதிகரித்து வெள்ளிக்கிழமை ரூ.120க்கு விற்கப்பட்டது. ரூ.80க்கு விற்கப்பட்ட அவரைக்காய் வெள்ளிக்கிழமை ரூ. 90க்கு விற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.