பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பண்ணை பசுமைக் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி: கூட்டுறவுத் துறை அமைச்சா் தகவல்

பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 மே 2022, 11:06 pm

DIN

பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் பருவமழை காரணமாக தக்காளியின் விலை வெளிச் சந்தையில் உயா்ந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க கூட்டுறவுத் துறையின் பண்ணைப் பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில், கூட்டுறவுத் துறை நடத்தி வரும் 65 பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் 150 மெட்ரிக் டன் அளவுக்கு தக்காளியும், 1,100 மெட்ரிக் டன் அளவுக்கு இதர காய்கறிகளும் கொள்முதல் செய்யப்பட்டன. அப்போது, தக்காளி கிலோவுக்கு ரூ.45 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்பட்டது.

காரணம் என்ன? தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருவதால் இப்போது தக்காளியின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் ரூ.120 வரை வெளிச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவுத் துறை நடத்தி வரும் பண்ணைப் பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்படும். தக்காளியின் வெளிச் சந்தை விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில், விற்பனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.