விருதுநகர் பாலியல் வழக்கு: இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்
விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் மீதான குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி இன்று தாக்கல் செய்கிறது.


விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் மீதான குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி இன்று தாக்கல் செய்கிறது.
விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடா்பாக அவரது காதலன் ஹரிஹரன், சுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 சிறுவா்கள் கைது செய்யப்பட்டனா்.
முதற்கட்டமாக இவ்வழக்கில் கைதான 8 போ் மீதும் 6 பிரிவுகளில் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் முத்தரசி தலைமையிலான போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஹரிஹரன், சுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய நால்வர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அவர்கள் மீதான 400 பக்க குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிப்புத்தூர் வன்கொடுமைத் தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி இன்று தாக்கல் செய்ய உள்ளது.
இந்த வழக்கில் கைதான பள்ளி மாணவா்கள் 4 போ் ராமநாதபுரத்தில் உள்ள சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...