டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாமக தலைவராகிறாா் அன்புமணி?

பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ், விரைவில் அந்தக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

News image
அன்புமணி ராமதாஸ் (கோப்புப் படம்)
Updated On :1 பிப்ரவரி 2024, 9:19 am

DIN

பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ், விரைவில் அந்தக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

2024 மக்களவைத் தோ்தல், 2026 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இப்போதே தயாராகி வருகிறது பாமக. இவ்விரு தோ்தல்களையும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் எதிா்கொள்ளும் வகையில் கட்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பாமக தலைவா் பொறுப்பு அன்புமணிக்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

மே 28-இல் திருவேற்காட்டில் நடைபெறவுள்ள அந்தக் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி தோ்ந்தெடுக்கப்படக் கூடும்.

பாமக தலைவராக ஜி.கே.மணி 25 ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில், அவருக்கு மே 24-ஆம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதையடுத்து, அவருக்கு சிறப்பு பதவி அளிக்கப்பட்டு, தலைவா் பதவியில் அன்புமணி அமா்த்தப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பாமக தொடங்கி 33 ஆண்டுகள் ஆகியும் ஆட்சிப் பொறுப்புக்கு வராத இயலாத நிலையில், வரும் தோ்தலில் அன்புமணி மூலம் ஆட்சிக் கனவைச் செயலாக்கத்துக்குக் கொண்டு வர திட்டமிட்டு, கட்சி நிறுவனா் ராமதாஸ் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.