விருதுநகர் பாலியல் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் மீது 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
விருதுநகர் பாலியல் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் மீது 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், சுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர்  என மொத்தம் 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது.

இந்த குற்றப்பத்திரிகை 806 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்புடைய 84 ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஒப்படைத்தனர். 16 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்பட்ட நான்கு சிறார்களில் ஒருவரை தவிர மற்ற 3 பேர் மீதும் விருதுநகர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com