இனி குறைந்த விலையில் தக்காளி! தமிழக அரசு நடவடிக்கை
வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


வெளிச்சந்தையில் தக்காளி விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் பருவமழை காரணமாக தக்காளியின் விலை வெளிச்சந்தையில் உயர்ந்துள்ளதைக் கட்டுப்படுத்தி, மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க தமிழக அரசு கூட்டுறவுத் துறையின் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் விலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒரு கிலோ ரூ.70/-முதல் ரூ.80/-வரை விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளியின் வெளிச்சந்தை விலை கட்டுப்படுத்தப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும். மேலும், தேவையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
23.05.2022 வரை 18 மெட்ரிக் டன் தக்காளி ரூ.0.15 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...