தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மே 29 முதல் ஜூன் 1 வரை 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.


தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மே 29 முதல் ஜூன் 1 வரை 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் சனிக்கிழமை கூறியது: வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மே 29-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் வீரகானூா், வேப்பூரில் தலா 50 மி.மீ., கடலூா் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தலா 40 மி.மீ., மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, அரியலூா் மாவட்டம் செந்துறை, கரூா், கடலூா் மாவட்டம் தொழுதூா், பெரம்பலூா் மாவட்டம் வி.களத்தூா், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூா், புதுக்கோட்டை மாவட்டம் காரையூா், விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தலா 30 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: லட்சத் தீவு, தென் கிழக்கு அரபிக்கடல், தெற்கு கேரளம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுவீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...