டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 1) ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இதில், தேர்தலின்போது வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து இன்று திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் கடைமடைப் பகுதிகளுக்கு மேட்டூர் அணை நீர் சென்று சேர்வதை உறுதிப்படுத்தவும், பருவமழையின்போது பயிர்கள் நீரில் மூழ்காமல் இருப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அனைத்து துறை சார்ந்த அமைச்சர்கள், செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
செம்பட்டியில் 23-இல் மின் தடை

பகலில் அலுவலகம், இரவில் மது அருந்தும் கூடம் அரியலூா் தச்சு தொழிலாளா் கூட்டுறவு சங்க கட்டடத்தின் அவலநிலை

புதுச்சேரி போலி மருந்து தயாரிப்பு விவகாரம்: அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி






