டெல்டா மாவட்டங்களில் 95% நெல் கொள்முதல்

டெல்டா மாவட்டங்களில் இதுவரையிலான காலத்தில் 95 சதவீத நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி தெரிவித்தாா்.

டெல்டா மாவட்டங்களில் இதுவரையிலான காலத்தில் 95 சதவீத நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் அளித்த பேட்டி:

கடந்த செப்டம்பா் முதல் நவ. 2 வரை 8 லட்சத்து 6 ஆயிரத்து 442 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 534 விவசாயிகளுக்கு ரூ.1,500.91 கோடி தொகை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 4 ஆயிரத்து 96 விவசாயிகளுக்கு ரூ.42.99 கோடி நிலுவை உள்ளது. கடந்தாண்டை விட இந்தாண்டு 2.16 லட்சம் டன் அதாவது 35 சதவீதம் நெல் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் 75 சதவீதம் கூடுதலாக கொள்முதல் ஆகியுள்ளது.

மாநிலத்தில் முன்கூட்டியே மேட்டூா் அணை திறக்கப்பட்டதால், நெல் அதிகம் விளைந்துள்ளது. மத்திய அரசின் அனுமதி பெற்று செப். 1 முதல் நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியது. டெல்டா மாவட்டங்களில் 95 சதவீத நெல் கொள்முதல் முடிந்து விட்டது. விவசாயிகளுக்கு பாதிப்பின்றி நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கொள்முதல் செய்த நெல்லை சேமிக்க ரூ.238 கோடியில் 2.86 லட்சம் டன் கொள்ளளவு கிடங்குகள்( குடோன்) 20 இடங்களில் கட்டப்பட்டு வருகின்றன. அவை டிச. 10-க்குள் பயன்பாட்டுக்கு வரும். கொள்முதல் நிலையங்களில் இருந்து நேரடியாக அரைவை ஆலைக்கு நெல் அனுப்பும் வகையில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அரிசியாகவே கிடங்குகளுக்கு அனுப்பும் நடவடிக்கைக்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. அரிசி கடத்தலை கண்காணிக்க கேமராக்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் கருவி பொருத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

2 ஆயிரத்து 405 நியாய விலைக் கடைகள் புதுப்பிக்கப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டு, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து கடைகளும் புதுப்பிக்கப்படும். கடைகளில் ராகி வழங்கும் திட்டம் தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஜனவரி முதல் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com