தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்துக்கு சோழன் உத்வேகம்: ஆளுநர் புகழாரம்!

அசாதாரணமான நிர்வாக புத்திசாலித்தனம், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்துக்கு ராஜராஜசோழனே உத்வேகம் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி புகாழாரம் சூட்டியுள்ளார். 
தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்துக்கு சோழன் உத்வேகம்: ஆளுநர் புகழாரம்!
Published on
Updated on
1 min read


அசாதாரணமான நிர்வாக புத்திசாலித்தனம், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்துக்கு ராஜராஜசோழனே உத்வேகம் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி புகாழாரம் சூட்டியுள்ளார். 

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் முடிசூட்டிய ஐப்பசி நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு 1,037 ஆவது சதய விழா புதன்கிழமை காலை திருமுறையுடன் தொடங்கியது. தொடர்ந்து கவியரங்கம், பரதநாட்டியம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளான வியாழக்கிழமை திருமுறை ஓதுவார்களுக்கு மாவட்டம் நிர்வாகம் சார்பாக புத்தாடை வழங்கி மரியாதை செய்யப்பட்டது. 

விழாவினை முன்னிட்டு வியாழக்கிழமை(நவ.3) தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜராஜசோழனின் பிறந்த நாள், சதய விழாவை முன்னிட்டு, அசாதாரணமான நிர்வாக புத்திசாலித்தனம், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்துக்கு ராஜராஜசோழனே உத்வேகம் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி புகாழாரம் சூட்டியுள்ளார். 

இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பேரரசர் ராஜராஜசோழனின் ஆட்சியில் மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், நிர்வாகத்திறன் ஆகியவற்றுக்கு அவர் எப்போதும் உத்வேகமாக இருப்பார்கள்

மேலும், அவரது ஆட்சியில் 'தமிழகம்' ஆழ்ந்த ஆன்மிக பண்பாட்டு எழுச்சி பெற்றது என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி புகாழாரம் சூட்டியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com