சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :4 நவம்பர் 2022, 11:02 am

DIN

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கி பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில்  அடுத்த 3 மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, தேனி, தென்காசி, தூத்துக்குடி, நாகை உள்ளிட்ட 30 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக,  இன்று நீலகிரி, கோவை தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை கணித்துள்ளது. 

சென்னையை பொருத்தவரை தமிழகம், புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.