கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோடு சிவகிரி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி ஒருவர் பலி

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே சாலையோரம் கார் கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி ஒருவர் பலியானார்.

News image
Updated On :12 நவம்பர் 2022, 4:48 am

DIN

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே சாலையோரம் கார் கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி ஒருவர் பலியானார்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் லேத் பட்டறை நடத்தி வரும் சதீஷ் (40),  சிவகிரி அருகே சிலுவம்பாளையத்தில் மனைவி அபிநயா சதீஷ், மகன், மகளுடன் வசித்து வருகிறார்.

Story image

இந்த நிலையில், நேற்றிரவு மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் காரில் வீடு திரும்பும்போது சிலுவம்பாளையம் என்ற இடத்தில் வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வெளியேற முடியாத சதீஷ் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

Story image

காலையில் அவ்வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிவகிரி போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

Story image

இந்த சம்பவம் குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.