பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

நிரம்பி வழிந்த வீரகனூர் ஏரி! மேலும் 2 ஏரிகள் நிரம்ப வாய்ப்பு

கெங்கவல்லி அருகே வீரகனூர் ஏரி நிரம்பியதால் மேலும் இரண்டு ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது. 

News image

நிரம்பி வழிந்த வீரகனூர் ஏரி

Updated On :12 நவம்பர் 2022, 6:51 am

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே வீரகனூர் ஏரி நிரம்பியதால் மேலும் இரண்டு ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது. 

சேலம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான வீரகனூர் ஏரி 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியால், சுற்றுவட்டாரத்தில் 800 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும்.

இந்நிலையில் தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளிக்கிழமை மாலை வீரகனூர் ஏரி நிரம்பியது. இந்த ஏரியிலிருந்து செல்லும் உபரி நீர் பகடப்பாடி, வெள்ளையூர் ஏரிகளுக்குச் செல்வதால், இந்த இரண்டு ஏரிகளும் இந்த வாரத்திற்குள் நிரம்பும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.