நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

32 ஆண்டு காலம் மிகவும் வேதனையுடன் பயணித்தேன்: நளினி

தங்களை விடுதலை செய்த மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி. ஒத்துழைப்பு அளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி என நளினி வேலூரில் பேட்டி அளித்துள்ளார். 

News image

கோப்புப் படம்

Updated On :13 நவம்பர் 2022, 10:26 am IST

தங்களை விடுதலை செய்த மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி. ஒத்துழைப்பு அளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி என நளினி வேலூரில் பேட்டி அளித்துள்ளார். 

வேலூர் பெண்கள் சிறையிலிருந்து நளினியும் வேலூர் ஆண்கள் சிறையிலிருந்து சாந்தன் முருகன் ஆகியோரும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து இன்று விடுதலையானார்கள். இந்த நிலையில் நளினி காட்பாடி பிரம்மபுரம் இல்லத்தின் வெளியில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: 

மத்திய மாநில அரசுகளுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். 32 ஆண்டுகால சிறைச்சாலையில் மிகுந்த துயரம் அடைந்துள்ளேன். இனிவரும் காலங்களில் கணவர் என்னுடைய பெண்ணுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். இதுதான் என்னுடைய நீண்ட கால ஆசை. 32 ஆண்டுகளில் சிறையில் இருந்து விட்டேன். பரோல் அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பரோல் அளித்ததின் மூலமே எனக்கு விடுதலை கிடைக்க மத்திய அரசு சிறையில் உள்ளவர்களுக்கு டெய்லரிங் உள்ளிட்ட  பல்வேறு சிறு தொழில்கள் அளிக்க உதவி செய்கிறது. மேலும் பல்வேறு இன்சூரன்ஸ் திட்டங்களும் அளித்து வருவது மிகவும் பயனளிக்கக்கூடிய திட்டங்களாக உள்ளது. ஆனால் சிறையில் அதற்கான சான்றிதழ்களை  சரியான முறையில் அளிப்பதில்லை. இனிவரும்  காலங்களில் குடும்பத்துடன் ஒன்றாக வாழ ஆசைப்படுகிறேன். தன்னுடைய விடுதலைக்கு பாடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.