/

40 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம்!

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

News image
ஏராளமான பெண்கள் நகைகளை அணிந்து பார்த்து வாங்கி செல்கின்றனர்.
Updated On :17 நவம்பர் 2022, 6:26 am

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

கடந்த சில நாள்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்களை கண்டுவரும் நிலையில், சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.39,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.4,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 குறைந்து  ரூ.67.20 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1,300 குறைந்துரூ.67,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 4,950
1 சவரன் தங்கம்............................... 39,600
1 கிராம் வெள்ளி............................. 67.20
1 கிலோ வெள்ளி.............................67,200

புதன்கிழமை  விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................... 4,970
1 சவரன் தங்கம்............................... 39,760
1 கிராம் வெள்ளி............................. 68.50
1 கிலோ வெள்ளி.............................68,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.