நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சென்னை பல்கலை: வினாத்தாள் குளறுபடியால் தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வின் வினாத்தாள் குளறுபடியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

News image

சென்னை பல்கலை

Updated On :18 நவம்பர் 2022, 10:16 am

DIN

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வின் வினாத்தாள் குளறுபடியால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சென்னை பல்கலைக்கழகத்திற்குள்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. 

இந்நிலையில், இளங்கலை மாணவர்களுக்கான மூன்றாவது செமஸ்டர் தமிழ் தேர்வு இன்று நடைபெறவிருந்த நிலையில், நான்காவது செமஸ்டர் தமிழ் தேர்வுக்கான வினாத்தாள் வழங்கியதால் மாணவர்கள் அதிர்க்குள்ளாகினர். 

இதையடுத்து, தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து கல்லூரிகள் தரப்பில் பல்கலைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. எனவே, இன்று நடைபெறவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு, தேர்வு நடைபெறும் மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலை அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.