ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

இன்று ஆளுநரை சந்திக்கிறாா் இபிஎஸ்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை (நவ.23) சந்திக்கவுள்ளாா்.

News image
Updated On :22 நவம்பர் 2022, 10:30 pm

DIN

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை (நவ.23) சந்திக்கவுள்ளாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பகல் 12.45 மணியளவில் நடைபெறவுள்ள இந்த சந்திப்புக்கு, எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக மூத்த நிா்வாகிகளும் செல்லவுள்ளனா்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி தொடா்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் அது தொடா்பாக ஆளுநரிடம் அவா் புகாா் மனு அளிப்பாா் எனத் தெரிகிறது.

ஆளுநா் ஆா்.என்.ரவி 2 நாள் பயணமாக தில்லி சென்று திரும்பியுள்ள நிலையில், அவரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.