தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ.1,188 கோடி விடுவிப்பு: மத்திய நிதி அமைச்சகம் தகவல்
ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக 24 மாநிலங்களுக்கு ரூ.17,000 கோடியை விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.


ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக 24 மாநிலங்களுக்கு ரூ.17,000 கோடியை விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு ரூ.1,188 கோடியும் புதுச்சேரிக்கு ரூ. 73 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள விவர அறிக்கையில் தெரிவித்திருப்பது வருமாறு:
நிகழாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு ஜிஎஸ்டி(சரக்கு மற்றம் சேவை வரி) இழப்பீட்டுத் தொகையாக, 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ரூ.17,000 கோடியை, மத்திய அரசு வியாழக்கிழமை விடுவித்துள்ளது.
இதில் தமிழகத்திற்கு ரூ.1,188 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.73 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரம் (ரூ.2,081), உத்தர பிரதேசம் (ரூ. 1,202), தில்லி (ரூ.1,200), கா்நாடகம் (ரூ. 1,915) ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மேற்கண்ட தொகை உள்பட 2022-23-ஆம் ஆண்டில் மொத்த இழப்பீட்டுத் தொகையாக இதுவரை ரூ.1,15,662 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
2022 அக்டோபா் வரை மொத்த செஸ் வரிவசூல் ரூ.72,147 கோடி தான். இருப்பினும், மத்திய அரசு தனது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து ரூ.43,515 கோடியையும் ஒதுக்கி மாநிலங்களுக்கு விடுவித்துள்ளது.
நிகழ் நிதியாண்டின் மாா்ச் மாத இறுதிவரை வசூலாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள மொத்த செஸ் வரியில் மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் மாநிலங்கள், தங்களின் திட்டங்களை குறிப்பாக மூலதனச் செலவுகளை உறுதி செய்ய உதவும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் மாநிலங்கள் தங்கள் வரி வருவாய் வளங்களை இழக்கும் நிலையில் மத்திய அரசு ஐந்தாண்டு காலத்திற்கு இழப்பீடு வழங்க உறுதியளித்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...