ஸ்ரீபெரும்புதூர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள இந்திரா காந்தி சிலையை அகற்ற முற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகம் எதிரே 1988ல் வைக்கப்பட்டுள்ள இந்திரா காந்தி சிலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்து வந்தது.
இதனால் தேசிய நெடுஞ்சாலைத் துறை பலமுறை காங்கிரஸ் கட்சியினரிடம் கூறியும், இந்திரா காந்தி சிலை அகற்றப்படாததால் தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறையுடன் இணைந்து நூற்றுக்கணக்கான போலீஸ் பாதுகாப்புடன் இந்திரா காந்தி சிலையை அகற்ற முற்பட்டனர்.
இப்பணியானது இன்று(சனிக்கிழமை) காலை சுமார் 6.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு 9 மணி வரை நடைபெற்றது. இதனால் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆமை போல் நகர்ந்து சென்றன. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சுங்குவார்சத்திரம் வரை சுமார் 10 கிலோமீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பின்னர், இந்திரா காந்தி சிலையை அகற்ற காங்கிரஸ் கட்சியினர் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்க, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அனுமதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் சீரானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!
4 தொகுதிகளில் வெற்றி... தமிழக மக்களுக்கு நன்றி: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!

புதுவைப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள்!
மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் கோட்டையைத் தகா்த்த தவெக!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


