
தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே வாழக்கோம்பை நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
வாழக்கோம்பை அரசு நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடைபெற்றது. இதற்கு ஜங்கமசமுத்திரம் ஊராட்சித்தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் சங்கீதா அழகப்பன், வார்டு உறுப்பினர்கள் தேவிசரவணன், திருமலை, எஸ்எம்சி தலைவர் கௌசல்யாதேவி, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் மற்றும் வாழக்கோம்பை இளந்தளிர் அமைப்பினர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியை ராதா வரவேற்றார். இதில் பள்ளி மாணவ,மாணவிகளின் குழு நடனம், நாடகம், தனி நடனம், வில்லுப்பாட்டு, தோல் கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்டவைகள் நடைபெற்றன.
போட்டிகளில் முதலிரு இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர்க்கு பரிசுகளை பெரியசாமி, அழகப்பன், சரவணன், திருமலை ஆகியோர் வழங்கினர்.
இதையும் படிக்க: பராமரிப்பு பணி: சென்னை - கோவை இடையே 6 ரயில்கள் ரத்து
பள்ளி நூலகத்திற்கு இளந்தளிர் அமைப்பினர் ரூ.6000 மதிப்புள்ள புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினர். பள்ளிஆசிரியை சுமதி நன்றி கூறினார். இவ்விழாவைக்காக பெற்றோர், ஊர் பொதுமக்கள் திரளாக வந்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.