பராமரிப்பு பணி: சென்னை - கோவை இடையே 6 ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக சென்னை - கோவை இடையே 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பராமரிப்பு பணி காரணமாக சென்னை - கோவை இடையே 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - சேலம் (22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் நாளை, டிச.1,2-ல் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம் - எழும்பூர் (22154) இடையே இரவு 9 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்  டிச.1,2,3-ல் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் - கோவை (12679) இடையே மதியம் 2.30  மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்  டிச.3-ல் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை - சென்னை சென்ட்ரல் (12680) இடையே காலை 6.15   மணிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி விரைவு ரயில்  டிச.3-ல்  முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் - கோவை (12675) இடையே காலை 6.10   மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்  டிச.3-ல் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை - சென்னை சென்ட்ரல் (12676) இடையே மதியம் 3.15   மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்  டிச.3-ல்  முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் - கோவை (12243) இடையே காலை 7.10   மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில்  டிச.3-ல் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை - சென்னை சென்ட்ரல் (12244) இடையே மதியம் 3.05    மணிக்கு இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயில்  டிச.3-ல்  முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும்,  சேலம் ஜங்ஷன் ரயில் நிலைய யார்டு பகுதியில் தண்டவாளம் இணைக்கும் பணி மற்றும் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் வழியாக இயக்கப்படும்  பல்வேறு ரயில்கள் செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, 

அதன்படி கரூர் - சேலம் பாசஞ்சர் ரயில் (06838) வருகிற டிசம்பர் 1 ,2 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது,
 
மேலும் வரும் டிசம்பர் மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் சேலம் - கரூர் பாசஞ்சர் ரயில் (06831), சேலம்-கரூர் பேசஞ்சர் ரயில் (06851), சேலம்-கரூர் பாசஞ்சர் ரயில் (06837), கரூர் -சேலம் பாசஞ்சர் ரயில் (06836), கரூர் -சேலம் பேசஞ்சர் ரயில் (06852), பெங்களூரு- காரைக்கால் ரயில் (16529), காரைக்கால்- பெங்களூரு ரயில் (16530), கோவை - சேலம் பாசஞ்சர் ரயில் (06802), சேலம் - கோவை பாசஞ்சர் ரயில் (06803), ஆகிய ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது,

இதேபோல் ஈரோடு - மேட்டூர் டேம் ரயில் (06407), மேட்டூர் டேம் - ஈரோடு ரயில் (06408), ஈரோடு - ஜோலார்பேட்டை ரயில் (06412), ஜோலார்பேட்டை - ஈரோடு ரயில் (06845), ஜோலார்பேட்டை - ஈரோடு ரயில் (06411), ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

கோவை - பெங்களூர் உதய் எக்ஸ்பிரஸ் (22666), பெங்களூரு - கோவை எக்ஸ்பிரஸ் (22665), பெங்களூர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (12677), எர்ணாகுளம்- பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் (12678) ஆகிய ரயில்கள் டிச.3-ல் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது, 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com